தூக்கத்தில் வரும் மூச்சுத் திணறலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அது கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா (OSA) என்பதே இதற்கு காரணம். இது மிக சாதாரணமாக இருந்தாலும், மிகக் கடுமையான தூக்கக் குறைபாடாகும்.
இந்த பிரச்சனை இருப்பவர்கள் நள்ளிரவில் எழுந்திருப்பார்கள். தூங்கி எழுந்ததும் சோர்வு, பகல் தூக்கம், தலைவலி, பாலியல் செயலிழப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு நீரிழிவு வரக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.
தொடர்ந்து இப்பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்ற கொடிய பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதால், இத்தகைய பிரச்சனைனை வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைப்பது, புகையை நிறுத்துவது, மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது OSA க்கான தீவிரத்தை குறைக்கலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) சிகிச்சையைப் பெறுவதன் மூலம், நோயாளிகள் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
குறிப்பாக CPAP சிகிச்சை, இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத் துடிப்பு நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும், இதய நோய் மற்றும் திடீர் இதயத் துடிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதிலும் உதவுகிறது.
உங்களிடம் அல்லது உங்கள் அறிமுகத்தில் இருப்பவருக்கு OSA இன் அறிகுறிகள், அதிக சத்தமாக இரவில் குறட்டை விடுதல், பகல் நேர களைப்பு, அல்லது தூக்கத்தின் போது அடிக்கடி மூச்சுத் திணறல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். தொடக்கத்திலேயே தக்க சிகிச்சையை அளிப்பது இதய நோய்களுக்கு உள்ள அபாயத்தை குறைக்க செய்யும்.