தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!
தொடை சதையை குறைக்க சில வீட்டு உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
தண்ணீரில் உடற்பயிற்சி செய்வது, எளிய மற்றும் பயனுள்ளதாக இருக்கும். ஆதலால், தண்ணீரில் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்து பழகலாம்.
ஸ்குவாட் உடற்பயிற்சிகள்:
இந்த உடற்பயிற்சி, தொடையின் முன்தசையை குறைக்கும் உடற்பயிற்சியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 50 முதல் 60 ஸ்குவாட்ஸ் வரை செய்யலாம் எனக்கூறப்படுகிறது.
ஓட்டப்பயிற்சி:
அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஓட்டப்பயிற்சி. இதனை, காலை அல்லது மாலை இரு வேளைகளிலும் செய்யலாம்.
லஞ்சஸ் உடற்பயிற்சி:
தொடையின் இரு பக்கங்களிலும் இருக்கும் தசையை குறைக்க இந்த உடற்பயிற்சியை செய்யலாம். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று இது.
சைக்ளிங்க் உடற்பயிற்சி:
சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். இதை செய்வதால் கணுக்கால் சதை குறையலாம்.
பர்பீஸ்:
தொடை சதை மட்டுமன்றி, வயிறு மற்றும் கை தசைகளை குறைக்கவும் பர்ப்பீஸ் உடற்பயிற்சியை செய்யலாம். இதை செய்வதால், கால்கள் வலிமையாகும்.
வேக நடைப்பயிற்சி:
ஓட முடியாதவர்கள், வேகமாக நடைப்பயிற்சி செய்து பழகலாம். இதுவும் ஓட்டப்பயிற்சி போலவே கலோரிக்களை எரிக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)