சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி
அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். ஆகையால் கிரகங்களில் அவரது தாக்கமும் மிக அதிகமாக உள்ளது.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் இருப்பார். 2025 ஆம் ஆண்டு அவர் மீண்டும் பெயர்ச்சி ஆவார். சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர் அடுத்த 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார்.
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் பல வித அனுகூலமான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு இந்த காலத்தில் ஏகப்பட்ட நற்பலன்கள் உண்டாகும். இந்த காலத்தில் குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் பல வித அற்புதமான நற்பலன்களை அளிக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அள்ளித் தரும். ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் பெரிய நன்மை ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவும் அதிகமாகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் வெற்றிகரமான நடந்துமுடியும். வேலையை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். இந்த பயணத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த நேரம் லாபகரமானதாக இருக்கும்.
தனுசு: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற: சனி பகவானின் கருணை பார்வை நம் மீது விழுந்து அவரது அருள் பெற பல வித தான தர்மங்களை நாம் செய்ய வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனி பலவான் காப்பாற்றுகிறார். இது தவிர சனி சாலிசா, ஹனுமான் சாலிசா ஆகியவற்றை பாராயணம் செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.