100 ரூபாய்க்கு, 100 GB டேட்டாவா... ஆடிப்போன Jio பயனர்கள்... என்ன விஷயம்?
ஜியோ நிறுவனம் மொபைல்களுக்கு மட்டுமின்றி வயர்லெஸ் இணைய சேவையையும் வழங்கி வருகிறது. Jio AirFiber என்ற பெயரில் இந்தியா முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.
Jio Airfiber மூலம் இதுவரை வாடிக்கையாளருக்கு 1TB வரை டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அதீத டேட்டா பயன்பாடு காரணமாக சில இடங்களில் இந்த 1TB டேட்டாவும் போதாது.
அந்த வகையில், Jio AirFiber குறைந்த ரூபாயில் வரும் டேட்டா பிளான்களை கொண்டு வந்துள்ளது. மொபைல்களில் இருப்பது போன்ற உங்களுக்கு AirFiberஇல் அடிப்படை பிளான் இருக்க வேண்டும். அதன்கீழ் இதனை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
Jio AirFiber சேவையிலும், மொபைலுக்கு வழங்கப்படுவது போன்று 5ஜி இணையம் வரம்பற்ற வகையில் வழங்கப்படுகிறது. இருப்பினும், சில இடங்களில் இதுபோன்ற டேட்டா திட்டங்களும் தேவைப்படுகிறது.
Jio AirFiber இதில் மூன்று ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் AirFiber பிளான்களில் ஏற்கெனவே ஓடிடி சந்தாக்களும் இலவசமாக கிடைக்கும் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
Jio AirFiber ரூ.401 பிளான்: இதன் வாடிக்கையாளருக்கு 1TB கூடுதல் டேட்டா கிடைக்கும். அடிப்படை பிளானின் வேலிடிட்டிதான் இதற்கும்.
Jio AirFiber ரூ.251 பிளான்: இதன் வாடிக்கையாளருக்கு 500GB கூடுதல் டேட்டா கிடைக்கும். அடிப்படை பிளானின் வேலிடிட்டிதான் இதற்கும்.
Jio AirFiber ரூ.101 பிளான்: இதன் வாடிக்கையாளருக்கு 100GB கூடுதல் டேட்டா கிடைக்கும். அடிப்படை பிளானின் வேலிடிட்டிதான் இதற்கும்.