புகைபிடிப்பதை நிறுத்த வேண்டுமா... ‘இந்த’ உணவுகளுக்கு முதலில் ‘NO’ சொல்லுங்க!
இன்றைய தலைமுறையினர் மதுவை விட புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாகி விட்டதன் காரணமாக, நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது மிகவும் சிறந்தது. இந்நிலையில், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த விரும்பினால், புகை பிடிக்கும் உணர்வை தூண்டும் சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதை நிறுத்துங்கள்.
தேநீர் மற்றும் காபி ஆகியவை காஃபின் கொண்ட பானங்கள். காஃபினேட்டட் பான உணவை உட்கொண்ட பிறகு, நிகோடின் ஆசை தொடங்குகிறது, இதன் காரணமாக புகைபிடிப்பதை நிறுத்த முடியாமல் போகலாம். நீங்கள் சிகரெட் அல்லது புகையிலையை கைவிட விரும்பினால், நீங்கள் தேநீர் அல்லது காபி அளவை குறைக்க வேண்டும்.
இனிப்பு உணவுகளான சாக்லேட், மிட்டாய் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைப் பொருட்களை உட்கொண்ட பிறகு, புகைபிடிக்க வேண்டும் உணர்வு ஏற்படுகிறது. எனவே நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், சர்க்கரை உணவுகளை குறைக்க வேண்டும்.
காரமான உணவை சாப்பிட்ட பிறகும் கைபிடிக்க வேண்டும் உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த திட்டமிட்டால், முதலில் காரமான உணவைக் கைவிடுங்கள்.
வெளிப்புற உணவுகள், அதிக வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக சிகரெட் அல்லது புகையிலைக்கான ஏக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் சிகரெட் அல்லது புகையிலை புகைப்பதை நிறுத்த விரும்பினால், எண்ணெயில் பொரித்த உணவுகளை படிப்படியாக குறைக்கவும்.
நீங்கள் புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் மதுவைக் குறைக்க வேண்டும். மது அருந்திய பிறகு, புகைபிடிக்கும் ஆசை தூண்டப்படுகிறது. எனவே, நீங்கள் சிகரெட்டைக் கைவிட முயற்சிக்கிறீர்கள் என்றால், மது, பீர் போன்றவற்றைக் கைவிடுங்கள்.