லவ் பார்ட்னர் உங்களுடன் சண்டை போடுவதே இல்லையா... உடனே உஷார் ஆகுங்கள்!
காதல் உறவில் உங்கள் பார்ட்னர் சண்டை போடுவதையே திடீரென நிறுத்திவிட்டார் என்றால் அவருக்கு இந்த 5 பிரச்னைகள் இருக்கலாம்.
இந்த பிரச்னைகளை உடனே கண்டறிந்து அவற்றை சரியாக்காவிட்டால் உறவு முறிந்துவிடலாம். எனவே, உடனே உஷாராகி அதில் கவனத்தை செலுத்துங்கள்.
காதல் உறவில் பார்ட்னர் சண்டையிடுவதை நிறுத்திவிட்டார் எனில் அவர் உறவை முறித்துக்கொள்ள தயாராகிவிட்டார் என அர்த்தம். அப்படியிருக்கையில், அவருக்கு என்ன பிரச்னை என்பதை பேசி நீங்கள் பரஸ்பரம் ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
உங்களுடன் சண்டையிடுவதையோ, வாக்குவாதம் செய்வதையோ பார்ட்னர் நிறுத்திவிட்டார் எனில் அவரின் உண்மையான அல்லது இயல்பான உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்த மறுக்கிறார் என அர்த்தம். அவர்களின் பேச்சுக்கு மரியாதை இல்லையென்றாலோ, பாராட்டு இல்லையென்றாலோ அதை காது கொடுத்து கேட்கவில்லை என்றாலோ பலரும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இது உங்கள் இடையேயான பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்திவிடும் அபாயமும் உள்ளது.
உங்களுடன் உணர்வு ரீதியாக அவர் துண்டித்துவிட்டாலும் கூட உங்களிடம் சண்டை போடுவதை அவர் நிறுத்திவிடுவார். அதாவது உங்கள் மீதான ஆர்வம் அவருக்கு குறையத் தொடங்கியிருக்கலாம், உறவில் பிடிப்பு இல்லாமல் இருக்கலாம், உங்களின் நடவடிக்கைகள் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, உணர்வு ரீதியாக இருவரும் இணைய தகவல் தொடர்பு மிக முக்கியம்.
காதல் உறவில் அடுத்த கட்டத்திற்கு நகரவோ அல்லது ஒரு அர்ப்பணிப்பு இல்லாமல் இருக்கும்போது அவருக்கு உங்களுடன் சண்டையிட மாட்டார்கள். இது உறவில் முற்றிலும் ஆர்வம் போய்விட்டதை குறிக்கும் எனலாம்.
அதேபோல் பேசினாலே பிரச்னைதான் வரும் என்ற காரணத்தினால் கூட சண்டையிடாமல் இருப்பார்கள். அதாவது சண்டையிட்டால்தான் அந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு வரும். ஆனால், சண்டையால் பிரச்னை வளர்ந்துகொண்ட போகிறது என நினைத்து சண்டையை தவிர்ப்பார்கள். எனவே, இது நிரந்தர தீர்வு இல்லை. இது உறவில் ஆரோக்கியமற்ற தன்மையை உருவாக்கும். எனவே, சண்டையின்போது பேசி பிரச்னைக்கு தகுந்த தீர்வு காண்பதே நல்லது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் உரிய வல்லுநர்களின் ஆலோசனையை பெறுங்கள். இதை Zee News உறுதிப்படுத்தவில்லை.