மாறும் விதிகளால் இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்! இது ராசிபலன் அல்ல
ஜூலை 1, 2023 முதல் பொதுமக்களின் சந்திக்கக்கூடிய மாற்றங்கள் இவை. இவை, வீட்டு பட்ஜெட்டில் ஏதாவது ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 ஆகும். ஜூலை 1, 2023 முதல் பான் செயலிழந்துவிடும்
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எல்பிஜி விலையை தவறாமல் மதிப்பாய்வு செய்து திருத்துகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக, 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிறுவனங்கள் குறைத்து நிவாரணம் அளித்தன. ஜூன் 1, 2023 அன்று, சிலிண்டரின் விலை ரூ.83.5 குறைக்கப்பட்டது, முன்னதாக மே 1, 2023 அன்று வணிக சிலிண்டரின் விலை ரூ.172 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1ம் தேதி, எல்பிஜி விலைகளுடன், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் மாற்றங்கள் செய்யப்படும். டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) மற்றும் மும்பையில் உள்ள மகாநகர் கேஸ் லிமிடெட் (எம்ஜிஎல்) ஆகியவை மாதந்தோறும், விலையை திருத்தி அமைக்கின்றன
வெளிநாட்டில் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவுகளை ஆதாரத்தில் வரி வசூல் (டிசிஎஸ்) கீழ் கொண்டு வருவதற்கான புதிய விதி அமல்படுத்தப்படும். 7 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டால், 20% வரை டிசிஎஸ் கட்டணம் விதிக்கப்படும்.
வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் நெருங்குகிறது. நீங்கள் இன்னும் உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31 ஆம் தேதிக்குள் அதை முடிக்கவும்
HDFC வங்கி மற்றும் HDFC இடையேயான இணைப்பு ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று HDFC குழுமத் தலைவர் தீபக் பரிக் அறிவித்தார். இந்த இணைப்பு, நிதி நிறுவனங்கள், அவற்றின் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது