எந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!
நவகிரகங்களில் மனோகாரகனாக கருதப்படும் சந்திரன், தனது 28 கலைகளுடன் பிரகாசமாக காட்சியளிக்கும் நாள் முழுநிலவு நாள். இந்த நாளில் செய்யும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. இன்று வைகாசி மாத பெளர்ணமி நாள்
பெளர்ணமிகளில் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பெளர்ணமியாக சிறப்பாக வணங்கப்படுகிறது. மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர் சித்ர குப்தன். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமியன்று சித்ரகுபதனை வணங்கும் நாள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
வைகாசி மாத பெளர்ணமி வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசி மாத பெளர்ணமி நாளில் தான் சிவனின் மைந்தன் முருகன் அவதரித்தார். வைகாசி விசாக நாளான இன்று முருகன் கோவில்களில் கோலாகலமாக பூஜைகள் நடைபெறும். இன்று தான் புத்த பெளர்ணமியாகவும் அனுசரிக்கப்படுகிறது
ஆனி மாத பௌர்ணமி மூலம் நட்சத்திரத்தன்று வருவதால் ஆனி மூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். சிவனுக்கு பூஜைகள் செய்வது விசேஷமானது
அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும் ஆவணி அவிட்ட நாள், பூணூல் போட்டுக்கொள்பவர்கள், அதை மாற்றும் நாள்.. இன்று தான் சகோதர-சகோதரிகளின் அன்பை, ராக்கி எனப்படும் ரக்ஷாபந்தன் மூலம் பிணைக்கும் நாள் ஆவணி அவிட்டம்
சிவபெருமானுக்கு உகந்தத ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும்
கார்த்திகைப் பௌர்ணமி, திருவிளக்கு தீபத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் மிக விசேஷமாக கொண்டாடப்படும்
திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் மார்கழி மாத பெளர்ணமி நாள் சிவனுக்கு உகந்தது. சிதம்பரத்தில் மார்கழி மாத முழுநிலவு நாள் சிறப்பாக கொண்டாடப்படும்