ATM Cash Withdrawal: முக்கிய விதி மாற்றங்களை அறிவித்தது ரிசர்வ் வங்கி
நிலையான இலவச வரம்பை விட வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து அதிக முறை பணம் எடுத்தால், அடுத்த ஆண்டு முதல் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அடுத்த ஆண்டு முதல் ஏடிஎம்களின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலவச மாதாந்திர வரம்பை விட அதிகமாக பணம் எடுப்பது அல்லது பிற பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பி.டி.ஐயின் செய்தியின்படி, இதன் கீழ், 2022 ஜனவரி 1 முதல், ஏ.டி.எம்-களில் இலவசமாக பணம் எடுப்பது அல்லது பிற வசதிகளுக்கான பரிவர்த்தனையை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக மெற்கொண்டால், அவர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ .21 செலுத்த வேண்டி இருக்கும். இது இப்போது ரூ .20 ஆக உள்ளது.
இலவச பரிவர்த்தனைகளின் மாத வரம்பை மீறினால், வங்கி வாடிக்கையாளர்கள் 2022 ஜனவரி 1 முதல் ரூ .20 க்கு பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .21 செலுத்த வேண்டி இருக்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
பிற வங்கியின் ஏடிஎம்களில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கும் (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) வாடிக்கையாளர்களுக்கு அனுமதி உண்டும். மெட்ரோ மையங்களில் மூன்று பரிவர்த்தனைகளும் மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும். இலவச பரிவர்த்தனைகள் தவிர, வாடிக்கையாளர் கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .20 ஆக உள்ளது.
மேலதிக அறிவிப்பில், ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 1, 2021 முதல், நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனைக்கு ரூ .15 முதல் ரூ .17 ஆகவும், அனைத்து மையங்களிலும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ .5 முதல் ரூ .6 வரையும் இண்டர்சேஞ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி அளித்தது. வங்கிகள் தங்கள் சொந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக ஏடிஎம்-களை பயன்படுத்துகின்றன. மேலும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற வருமானத்தை ஈட்டி அவை இந்த சலுகையை வழங்குகின்றன.