மலச்சிக்கலை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய உணவுகள்!
மலச்சிக்கலில் இருந்து விடுபட உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது, இது உங்கள் குடல்களை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிறு தொடர்பான பல நோய்களுக்கு மலச்சிக்கல் ஒரு காரணம். மலச்சிக்கலால், வாயுத்தொல்லை, வாயு உருவாவது, வயிற்றுப் பிடிப்பு, வலி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் கூடவே ஏற்படுகின்றன. இந்நிலையில் குடல் இயக்கத்தை எளிதாக்கும் 5 உணவுகளை தெரிந்து கொள்வோம்.
ஓட்ஸ் என்பது காலை உணவில் சாப்பிடும் ஆரோக்கியமான உணவு. ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த நார்ச்சத்து உங்கள் குடலுக்குள் செல்வதன் மூலம் ஒரு ப்ரீபயாடிக் போல செயல்படுகிறது.
ப்ரோக்கோலி மிகவும் சத்தான பச்சை காய்கறிகளில் ஒன்றாகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் அதில் உள்ள நார்ச்சத்து உங்கள் மலத்தை அடர்த்தியாக்குகிறது, இதன் காரணமாக அது எளிதாக வெளியேறும். ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் உங்கள் குடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.
ஆப்பிளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, காலையில் வெறும் வயிற்றில் உங்கள் குடல் இயக்கத்தை எளிதாக்க போதுமானது. உங்கள் குடலில் வீக்கம் இருந்தால் அல்லது உங்கள் வயிறு சுத்தமாக இல்லை என்றால், நீங்கள் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிளில் உள்ள பெக்டின் உங்கள் மலத்தை தளர்த்தி மலச்சிக்கலை போக்குகிறது.
நல்ல அளவு நார்ச்சத்து சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் உள்ளது. கரையாத நார்ச்சத்து இதில் காணப்படுகிறது. உங்கள் மலத்தை தளர்த்தவும் மற்றும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் வேலை செய்கிறது. இது மட்டுமின்றி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொள்வது உங்கள் குடலில் உள்ள அழற்சியையும் குறைக்கிறது.
ஆளிவிதைகளில் அதிக அளவு கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலையும் விடுவிக்கிறது. இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன.