மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டும் 8 யோகா பயிற்சிகள்! காலையில் செய்யலாம்..
வீரபத்ராசனம்:
நம் வாழ்வில் தீராப்பிணியாக பிடித்துக்கொண்டிருக்கும் மனச்சோர்வை, வீரபத்ராசனம் ஆசனத்தை கொண்டு தீர்க்கலாம். இதை செய்தால் உடனே நமது மனச்சோர்வு நீங்கும் என கூறப்படுகிறது.
உத்தனாசனம்:
மனநிலையை மேம்படுத்த, நினைவாற்றலை விரிவாக்க உத்தனாசனத்தை செய்யலாம். இது, மன நலனுக்கு மட்டுமன்றி உடல் நலனுக்கு நன்மை பயக்கும் ஆசனங்களுள் ஒன்றாகும்.
உத்காட்டா கோணாசனம்:
உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை செலுத்தும் யோகாசனங்களுள் இதுவும் ஒன்று. இதை செய்வதால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் பெருகி, நம்மால் பாசிடிவாக யோசிக்க முடியுமாம்.
சவாசனம்:
இந்த ஆசனத்தை எந்த வயதுடையவர்களும் செய்யலாம். கை கால்களை அகட்டி உடல் பக்கங்களில் வைத்து, தசைகளை தளர்த்தி அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும்.
நடராஜாசனம்:
இது, பொதுவாக பரத நாட்டியத்தில் உபயோகிக்கப்படும் ஒரு போஸ் ஆகும். இதனால்தான் இதற்கு இப்பெயர் வந்த்தாக கூறப்படுகிறது. மனப்பதற்றத்தை போக்கி, நன்றாக தூங்க உதவும் யோகாசனங்களுள் ஒன்று இது.
பத்த கோணாசனம்:
இதை ஆங்கிலத்தில் butterfly pose என்று குறிப்பிடுவர். உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்றால் கண்டிப்பாக இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.
ஆனந்த பாலாசனம்:
அதிகமாக யோசிப்பவர்கள் இந்த யோகாசனத்தை கண்டிப்பாக செய்யலாம். இது, உங்கள் மனதை நிதானமாக செயல்படவைக்க உதவும். உங்கள் மனதில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்.
அதோ முக்கா ஸ்வானாசனம்:
அதோ முக்கா ஸ்வானாசனம் உடற்பயிற்சியை நம் மனநிலையை மகிழ்ச்சி படுத்துவதற்காக செய்யலாம். இது, தலை முதல் கால் வரை அனைத்து உடல் பாகங்களுக்கும் ரத்தஓட்டம் செல்வதற்கு உதவும்.