Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்..

Tue, 09 Apr 2024-1:58 pm,

சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பிரபலமானவர், மமிதா பைஜு. மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆனவராக இருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘ரெபல்’ படத்திலும் மமிதா நாயகியாக நடித்திருக்கிறார். 

மமிதா, அடுத்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைப்பெற்றது. 

இந்த போட்டியை, நடிகை மமிதா பைஜு நேரில் கண்டு ரசித்திருக்கிறார். இது குறித்த பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

மமிதாவை மஞ்சள் உடையில் பார்த்த ரசிகர்கள், இவரது புகைப்படங்களை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மமிதா, அடுத்து இன்னும் சில மலையாள படங்களில் கமிட்டாகி பிசியாக வலம் வரும் இளம் கதாநாயகியாக இருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link