IPL Auction 2021: இந்த 6 வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும்

Wed, 17 Feb 2021-1:38 pm,

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடிய போது க்ளென் மேக்ஸ்வெல் தன் முழு திறன் அளவிற்கு விளையாடவில்லை. இந்த ஆஸ்திரேலிய வீரருக்கு பல முறை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். ஆகையால், இந்த முறை அவரை பஞ்சாப் விடுவித்துள்ளது. ஆனால், அவரது திறமை குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல்லை வாங்க பல அணிகள் அதிகப்படியான பணத்தை கொடுக்க தயாராக இருக்கக்கூடும்.  

டி 20 இன் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான அலெக்ஸ் ஹேல்ஸ் IPL போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் 2018 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷில் (BBL), ஹேல்ஸ் அனைவரையும் விட அதிகமாக 543 ரன்களை எடுத்தார். இதில் ஹேல்ஸ் ஒரு அற்புதமான சதம் மற்றும் மூன்று அரைசதங்களை அடித்தார். IPL 2021 ஏலத்தில், இவருக்காகஅனைத்து அணிகளும் மிகப்பெரிய தொகையை செலுத்த தயாராக இருப்பார்கள்.

தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் IPL 2020 இல் RCB-யின் ஒரு பகுதியாக இருந்தார். இப்போது இந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய போட்டிகளில், மோரிஸ் 9 போட்டிகளில் பங்கேற்றார். அதில் அவர் 19.09 என்ற சராசரியில், 6.63 என்ற எகானமி வீதத்தில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். மோரிஸ் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். இந்த ஆண்டு அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் வெகுவாக முயற்சி செய்யலாம்.

ஹர்பஜன் சிங் (40) தனிப்பட்ட காரணங்களால் 2020 ஆம் ஆண்டில் IPL-ல் விளையாடவில்லை. இந்த ஆண்டு சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK) அவரை விடுவித்துள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் ஐ.பி.எல்-ல் இதுவரை 160 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் மொத்தம் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள பல அணிகள் ஆர்வம் காட்டக்கூடும்.

IPL 2021 ஏலத்தின் போது, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க பல அணிகளுக்கு இடையில் போட்டி நிலவக்கூடும். சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித்தை தங்கள் அணியிலிருந்து வெளியிட்டது. தற்போது ஸ்மித் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். மேலும் RCB உட்பட பல அணிகளுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் தேவைப்படுகிறார்கள். ஸ்மித்துக்கு கிரிக்கெட்டில் ஒரு பெரிய பெயர் உண்டு. இவரை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்களுக்கு இடையில் ஒரு போரே ஏற்பட வாய்ப்புள்ளது.

டி20 போட்டிகளில் உலகின் தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் வீரர் இதுவரை IPL-லில் விளையாடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மாலன் டி-20 போட்டிகளில் மிகச்சிறந்த வீர்ரகளில் ஒருவர். 19 டி 20 போட்டிகளில், மாலன் 53 என்ற சராசரியில் 855 ரன்களை எடுத்துள்ளார். எனவே இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பல அணிகள் அவரை தங்கள் அணியில் அங்கமாக்க போட்டியிடலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link