லேப்டாப்பில் சார்ஜ் அதிகம் இறங்குகிறதா? இந்த செட்டிங்கை உடனே மாற்றுங்க!

Tue, 19 Nov 2024-12:11 pm,

தற்போது லேப்டாப் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கேம் விளையாடுவது முதல், அலுவலக, கல்லூரி வேலைகளுக்காக லேப்டாப்பை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.    

எனவே லேப்டாப் பழுதாகி விட்டால் ஒரு கை இல்லாதது போல் உணர்வோம். லேப்டாப்பை நாள் முழுவதும் பயன்படுத்தும் போது அதிக மின்சார கட்டணம் வரலாம். இதனை சரி செய்ய, லேப்டாப் பேட்டரி ஆயுளை நீட்டிக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

லேப்டாப்பில் நீண்ட நேரம் சார்ஜரை பயன்படுத்தாமல், auto energy saver அம்சத்தை பயன்படுத்தலாம். அனைத்து Windows 11 லேப்டாப்பிலும் இந்த ஆற்றல் சேமிப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் சார்ஜர் இல்லாமல் லேப்டாப் நீண்ட நேரம் இயங்கும்.

 

நீங்கள் லேப்டாப்பை தொடர்ந்து பயன்படுத்தாத போதும் பேட்டரி தொடர்ந்து இயங்கி கொண்டே தான் இருக்கும். எனவே ஒரு நிமிடம் அல்லது மூன்று நிமிடங்களுக்கு தானாகவே Sleep Modeக்கு போகும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளுங்கள்.

 

லேப்டாப்பில் அதிகம் சார்ஜ் குறைவதற்கு காரணம் அதிக Screen Brightness தான். எனவே auto brightness அம்சத்தை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் சார்ஜ் நீண்ட நேரத்திற்கு வரும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link