PPF அளிக்கும் ஜாக்பாட் வருமானம்: இந்த விதிகளில் கவனம் தேவை
மக்கள் தற்போது PPF திட்டத்தின் மூலம் 7.1 சதவீத வட்டியைப் பெறுகின்றனர். இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
பிபிஎஃப் திட்டத்தில் பெறப்படும் வட்டி நிலையானதாக இருப்பதில்லை. அரசாங்கம் அதை மதிப்பாய்வு செய்து மாற்றங்களைச் செய்யலாம்.
PPF திட்டத்தின் மூலம், ஒரு நிதியாண்டில் மக்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதேசமயம் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
அதே நேரத்தில், நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் 500 ரூபாய் கூட டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், பிபிஎஃப் கணக்கு நிறுத்தப்படும், அதாவது செயலற்றதாகிவிடும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
கணக்கு முடக்கப்பட்டால், உங்கள் கணக்கை மீட்டெடுக்க நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஆகையால் குறைந்தபட்சம் ரூ. 500 ஆவது டெபாசிட் செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
மக்கள் PPF திட்டத்தின் மூலம் வரியைச் சேமிக்கலாம். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது 80C ஐப் பயன்படுத்தி ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி பெறலாம்.
PPF திட்டத்தின் மூலம், மக்கள் 15 ஆண்டுகளுக்கு திட்டத்தில் முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்கள் முதிர்வுத் தொகையைப் பெறுவார்கள். அதேசமயம், ஒருவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பிபிஎஃப் கணக்கைத் தொடர விரும்பினால், அவர் 5 ஆண்டுகளுக்கு பிபிஎஃப் கணக்கைத் தொடர வேண்டும்.