கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இதையடுத்து அவர் 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் மூலமாக கம்-பேக் கொடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து, தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சைத்தான் எனும் திரைப்படம் இந்தியில் வெளிவந்தது. அதேபோல் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுமே அமோக வரவேற்பினை பெற்றது.
இதனிடையே கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்ரீகாந்த். ராஜ்குமார், ஜோதிகா உள்பட பலர் நடித்த இந்த படத்தை துஷார் ஹிரநந்தனி என்பவர் இயக்கி இருந்தார். மேலும் சைத்தான் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம் இந்த படத்திற்கும் கிடைத்தது.
தற்போது கோலிவுட் மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்த ஜோதிகா பாலிவுட் மக்கள் மனதையும் பிடித்து வருகிறார். தொடர்ந்து இந்தியில் ஹிட் படங்களை கொடுத்து வரும் ஜோதிகா தற்போது தமது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.
சோலோ ஹீரோயினாக பட்டையை கிளப்பி வரும் நடிகை ஜோதிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இதனால் நடிகை ஜோதிகாவிற்கு பாலிவுட்டில் மவுசு அதிகமாகி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.