அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து

Sun, 02 Jun 2024-6:01 pm,

இன்று இசைஞானி இளையராஜா தனது 81வது பிறந்தநாளையும், இயக்குனர் மணிரத்னம் தனது 69 பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றனர்.

 

இளையராஜா மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து நாயகன், தளபதி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர்களுக்கு தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இளையராஜா மற்றும் மணிரத்னம் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில், “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. 

மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்...  பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க என்று கூறியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link