அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை கனகா! ரசிகர்கள் கவலை..
பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் கனகா. இவர், 80 மற்றும் 90களில் வெளியான படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் கனகா. முதல் படமே இவருக்கு ஏறுமுகமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து அவர் பல்வேறு படங்களில் நடித்து விட்டாலும் இன்றளவும் ‘கரகாட்டக்காரன் கனகா’வாகத்தான் ரசிகர்களால் அறியப்படுகிறார்.
தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், ரகுமான், ராமராஜன், அர்ஜுன், விவேக், விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து விட்டார், கனகா.
தமிழ் மொழி படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அங்குள்ள முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் ஹீரோயின் என்ற பெயரை பெற்றார். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
கனகா கடைசியாக விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை. அதன் பிறகு மலையாளத்தில் மட்டும் 2000ஆம் ஆண்டு இரண்டு படங்களில் நடித்திருந்தார்.
கனகாவை கிட்டத்தட்ட 23 வருடங்களாகவே திரையில் பார்க்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டதாக பொய்யான தகவல்கள் பரவியது.
தற்போது கனகாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை குட்டி பத்மினி, கனகாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில் கனகா, ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயிருக்கிறார். இவரை பார்த்த ரசிகர்கள், “கரகாட்டக்காரன் கனகாவா இது..” என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.