Kiss Day 2024: முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா?
காதலர் தின வாரத்தின் 7வது நாளான பிப்ரவரி 13ஆம் தேதி கிஸ் டே கொண்டாடப்படுகிறது. ரோஸ் டே, ப்ரப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே ஆகிய தினங்களை அடுத்து கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளை பலர் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கின்றனர். காதலர்கள் மட்டுமன்றி, நண்பர்கள், பிடித்தவர்கள் என பலரும் தங்களுக்கும் அன்பு முத்தங்களை பரிமாறிக்கொள்வது உண்டு.
முத்தத்தில் பல வகைகள் உள்ளன, அவற்றிற்கு பல அர்த்தங்களும் உள்ளன. நெற்றியில் முத்தம், கன்னத்தில் முத்தம், உதட்டு முத்தம், கையில் முத்தம், உச்சி முகர்ந்து முத்தம் என இப்படி முத்தத்தின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி, முத்ததை பரிமாறிக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல உள்ளன.
முத்தம் கொடுப்பதால், உடல் நலக்கோளாறுகளும், மன நலக்கோளாறுகளும் சரியாகும் என பலரால் நம்பப்படுகிறது. நம் மன நலனை மேம்படுத்துவதற்கு பயன்படும் முத்தத்தில் இருக்கும் அற்புதமான நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அன்புக்குரியவருக்கு முத்தம் கொடுப்பது நம் மனதில் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, தொடுதலின் முக்கியமான அம்சம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு அதிகரிக்குமாம்.
உங்கள் பார்ட்னரை அன்புடன் முத்தமிடுவது, நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களை ரிலீஸ் செய்ய உதவுமாம். இதனால், மன அழுத்தம் குறைந்து, மன சோர்வும் விலகும் என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முத்தமிடுவது, இருவருக்கும் உடலுறவில் ஆர்வத்தை அதிகரிக்கும் ஒரு நல்ல பயிற்சியாகவும் இருகும் என கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளில், உடலுறவு ஒருவரின் மனம் மற்றும் உடல் நலனில் பல்வேறு நல்ல வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், முத்தமிடுவது உடலுறவிற்கு முன்பு ஈடுபடும் நல்ல முன்விளையாட்டாகவும் கூறப்படுகிறது.
ஒருவர் இன்னொருவரை உணர்ச்சிமிக்க முத்தமிடும் போது, ஒரு நிமிடத்திற்கு 2 முதல் 3 கலோரிகள் குறையும் என சில மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போதே உங்கள் அன்புக்குரியவரை கட்டியணைத்து அவரது அனுமதியும் அவரை முத்தமிட்டு மகிழுங்கள்!