பட்டு போன்ற சருமத்தை பரிசாக அளிக்கும் கிவிப் பழம்
கிவியில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் இளைப்பதற்கு தேவையான அனைத்து சத்துகளையும் பரிபூரணமாக கொண்டது கிவி
கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இதனை உட்கொள்வதன் மூலம் நமது சருமம் பளபளக்கும்.
மெக்னீசியம் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன. இரும்புச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட கிவி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது.
காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும் மழைக்காலத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் கிவி, ஆன்டிபாடிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கிறது
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்ல ஆன்டிபாடி செயல்பாடு முக்கியமானது.
செரோடோனின் உற்பத்திக்கு விட்டமின் சி இன்றியமையாதது, எனவே கிவி சாப்பிடுவது நமது மனநிலையையும் மேம்படுத்த உதவும்
மன அழுத்தம், தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கிறது கிவி பழம்