தொப்பை கொழுப்பு கரைய.. உங்களை ஏமாற்றாத 7 நாள் ‘Diet Plan’!
காலை உணவில், காய்கறிகளால் செய்யப்பட்ட சேமியா உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள், 1 சப்பாத்தி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், காய்கறிகளுடன் 200 கிராம் பன்னீர் சேர்க்க வேண்டும். பன்னீரில் அதிகம் புரோட்டின் உள்ளது.
காலை உணவில் புதினா சட்னியுடன் வெஜிடபிள் ஊத்தப்பம் சாப்பிடுங்கள். மதிய உணவில், 3 இட்லிகள் மற்றும் 1 கப் சாம்பார் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் நிறைந்த உப்புமா சாப்பிடுங்கள்.
காலை உணவில், காய்கறிகள் நிறைந்த 1 கப் உப்புமா சாப்பிடுங்கள். இதிலும் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். மதிய உணவில், 1 கப் தயிர், 1 கப் காய்கறி, 1 சாப்பாதி அல்லது சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், ராகி தோசை சட்னியுடன் எடுத்துக் கொள்ளுங்கள்
காலை உணவில், ரொட்டியுடன் 2 வேகவைத்த முட்டை அல்லது 1 முட்டை ஆம்லெட் சாப்பிடுங்கள். முட்டை பிடிக்காதவர்கள் முட்டை தவிர்த்து விடலாம். அதற்கு பதிலாக புரோட்டீன் நிறைந்த காய்கறி அல்லது பன்னீரை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவில், 1 கப் ராஜ்மா, 1 கப் சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட், முளை கட்டிய தானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்
காலை உணவில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். மதிய உணவில், 2 ஊத்தாப்பம், 1 கப் சாம்பார், 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். ஊத்தப்பத்திலும் ராகி மாவு கலந்ததாக இருந்தால் கூடுதல் சிறப்பு. இரவு உணவில், புதினா சட்னியுடன் 1 பொங்கல் சாப்பிடவும். இதிலும் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது குதிரைவாலியாக பயன்படுத்தி பொங்கல் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
காலை உணவில், 1 வெந்தய கீரை சேர்த்து செய்யப்பட்ட உணவுடன் சப்பாத்தி அல்லது தோசை, இட்லி போன்றவற்றை அரை கப் தயிருடன் சாப்பிடுங்கள். தோசை அல்லது இட்லி ராகி மாவு கலந்து செய்யப்ப்பட்டிருந்தால் மேலும் சிறப்பு. மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பனீர், அரை கப் பருப்பு மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், வெஜிடபிள் கட்லெட் சாப்பிடுங்கள். இது பொரித்ததாக இல்லாமல், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைத்ததாக இருந்தால் மிகவும் நல்லது.
காலை உணவில், காய்கறிகள் நிறைந்த அவல் உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். பழுப்பு அவலாக இருந்தால் கூடுதல் சிறப்பு. மதிய உணவில், ஒரு சப்பாத்தி அல்லது ஒரு கப் சாதம், 1 கப் பருப்பு உணவு, 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில் வேக வைத்த உணவை அளவாக சாப்பிடுங்கள்.
மேலே கூறப்பட்டுள்ள டயட் தவிர, எல்லா நாட்களிலும், காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர், சீரகம் தண்ணீர் அல்லது இஞ்சி எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு, இரவில் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட 1 வாதுமை பருப்பு, 4 பாதாம், 1 அத்திப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். பின்னர் இது தவிர, ஏதேனும் இரண்டு விதமான பழங்களையும் நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.
இரவு உணவுக்குப் பின் குடிக்க வேண்டிய ட்ரிங்க்ஸ்: தினமும் இரவு உணவுக்கு 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு க்ரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சீரகம் டீ, அல்லது பெருஞ்சீரகம் டீ குடிக்கவும். இது உணவை ஜீரணிக்க உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.