Aloe Vera Gel: ஆலுவேரா ஜெல்லை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
கற்றாழை செடிகளில் இருந்து சில கிளைகளை உடைத்து மேலே இருக்கும் பச்சை நிற தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூனால் தனியாக எடுக்கவும். இதனை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடைகளில் ஜெலட்டின் பவுடர் வாங்கலாம். இது ஜெல்லி செய்வதற்காக பயன்படுத்தும் ஒரு பவுடர். ஒரு சிறிய கப்பில் ஜெலட்டின் பவுடரை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டு, அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும்.
இதை அடுப்பில் நேராக வைக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஜெலட்டின் பவுடர் கலவையை வைத்து 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை சுட வைத்தால் ஜெல் பதத்திற்கு வந்துவிடும்.
ஜெலட்டின் கலவை ஆறிய உடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள ஆலோவோராவை கலந்தால் ஆலுவேரா ஜெல் ரெடி.
கடைகளில் கிடைக்கும் ஆலு வேரா ஜெல்லில் நிச்சயமாக ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்துதான் இருக்கும். அதனால் தான் நீண்ட நாட்களுக்கு ஜெல் கெட்டுப்போகாமல் இருக்கிறது. ஆனால் நம் வீட்டில் தயார் செய்யும் இந்த ஆலோ வேரா ஜெல்லை 10 நாட்களுக்கு மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.