சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் `டூரிஸ்ட் ஃபேமிலி` படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !
தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சசிகுமார் இவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி' என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இதன் அட்டகாசமான டீஸர் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கும் கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் பல்வேறு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இதனை வெளியிட்டுப் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தி அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சிம்ரன், சசிகுமார், யோகி பாபு, கமலேஷ், மிதுன் ஜெய் சங்கர், எம். எஸ். பாஸ்கர்,ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் சூப்பரான ஒளிப்பதிவு செய்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் தனது இசைக்கலையைக் காட்டியுள்ளார். இதில் அருமையான பின்னணி இசையை அமைத்து படத்திற்கு இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.
இப்படத்திற்கு பரத் விக்ரமன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகிவருகிறது.
இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.