வேட்டையன் படம் ‘இந்த’ ஓடிடியில் வெளியாகும்! எந்த தளம் தெரியுமா?
ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.
வேட்டையன் திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நேர்மையான காவல் அதிகாரியாக, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார்.
வேட்டையன், கமர்ஷியல் படமாக இருந்தாலும், நல்ல கதையம்சம் நிறைந்ததாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த்-பகத் பாசிலின் காம்போ படத்தில் நன்றாக செட்-ஆகியிருக்கிறது. பகத், சுட்டித்தனமான இளைஞனாக பாட்ரிக் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அமிதாப் பச்சன் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அடுத்த படமான கூலி-ஐயும் இந்த நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் சாட்டிலைட் ரைட்ஸை, சன் டிவி வாங்கியிருக்கிறது.
வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் தெரியுமா?
அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.