40 லட்ச சம்பளத்தை 10 கோடியாக உயர்த்திய நடிகை! அதுவும் ஒரே படத்தில்..யார் தெரியுமா?
இந்தி திரையுலகில், தற்போது ட்ரெண்டிங்கிள் இருக்கும் நாயகியாக வலம் வருபவர், திரிப்தி டிம்ரி.
கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.
அப்படி, அவருக்கு வந்த வாய்ப்புகளுள் ஒன்று பேட் நியூஸ். இந்த படத்தில் அவர் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவர், இந்த படத்தில் நடிக்கும் போது சுமார் ரூ.40 முதல் 80 லட்சம் வரை வாங்கி வந்தாராம்.
பேட் நியூஸ் படத்திற்கு பிறகு இவருக்கு அதிகமாக பட வாய்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
பேட் நியூஸ் படத்தை அடுத்து அவரது சம்பளம் தற்போது ரூ.10 கோடியாக உயர்ந்திருக்கிறதாம்.
இவர், அடுத்து ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ எனும் இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து, திரிப்தி டிம்ரியின் சம்பளம் குறித்து கேள்வி பட்டவர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.