Poonam Bajwa: கவர்ச்சி ஆடையில் ஹாயாக போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா! வைரலாகும் போட்டோஸ்..
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பூனம் பஜ்வா.
இவர், தமிழில் முதன் முதலில் தோன்றிய படம், சேவல். இந்த படத்தில் இவர் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பிறப்பில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகையான இவர், பாம்பேயில் படித்து வளர்ந்தார். இவருக்கு முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது தெலுங்கு திரையுலகம்தான்.
தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு, நாட்கள் ஆக ஆக, பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
அரண்மனை படத்தின் 2 ஆம் பாகத்தில் இவர் நடித்ட போது, அதன் மூலம் இவர் கம்-பேக் கொடுப்பார் என பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.
கடைசியாக 2022ஆம் ஆண்டு சில படங்களில் நடித்து விட்டு அத்துடன் எந்த மொழி படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இவர், சமீப காலமாக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவை, வைரலாகி வருகின்றன.