வேகமா எடை குறைக்க சூப்பர் டிப்ஸ்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்... ட்ரை பண்ணி பாருங்க
உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர்கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நடைபயிற்சி மிகவும் எளிதான ஒரு பயிற்சியக இருந்தாலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நலன்களை அளிக்கின்றது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடந்தால், கலோரிகளை எரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். இதனால் கால்களுக்கு உடற்பயிற்சியும் கிடைப்பதுடன், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும். இதன் மூலம் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக அவசியம். உடலில் போதுமான அளவு நீரை பராமரிப்பதன் மூலம், ஆக்ஸிஜன் ஓட்டம் சீராக இருப்பதுடன் உடலின் ஆற்றல் நிலையும் மேம்படும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவ்வப்போது பசி எடுக்கும் உணர்வையும் குறைக்கிறது. இதனால் கூடுதல் கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
காலை வேளையில் பழங்களை சாப்பிடுவது நல்லது. பழங்களு காய்களும் கலோரி அளவை அதிகரிக்காமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக உள்ளன. காலை உணவில் பழங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
அன்றாட டயட்டில் புரதச்சத்து இருப்பது முக்கியம் என கூறப்படுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது. எடை இழப்புக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகிக்கொள்ளுங்கள். படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் கால்கள் மற்றும் பிட்டங்களை வலுப்படுத்தும் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மேல் தளங்களுக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். இது கலோரிகளை எரித்து, உங்கள் இதய ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். காலையில் புரதச்சத்து நிறைந்த, நார்ச்சத்து நிறைந்த, உடலுக்கு ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கலோரி அளவை விரைவாக குறைத்து உடல் எடையை குறைக்க முடியும்.
வேகமான வாழ்க்கை முறையால் ஏற்படும் இறுக்கத்தை போக்கி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா ஒரு நல்ல வழியாக பார்க்கப்படுகின்றது. வீட்டிலேயே யோகா செய்வதன் மூலம், தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss). இதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மையும் அதிகரிக்கின்றது. இது மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.
நடனம் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால், உடல் எடையை குறைக்கவும் இது மிகவும் சிறந்த ஒரு வழியாக கருதப்படுகின்றது. வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு நடனமாடலாம். நடனமாடும்போது, கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். இது உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, தசைகளை டோன் செய்ய உதவுகிறது. ஏதாவது பாடல் அல்லது இசைக்கு ஏற்றவாறு நடனமாடும்போது, உடலுக்கு மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்றது.
நமது தினசரி வீட்டு வேலைகளைச் செய்வதும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். அனைத்து பணிகளுக்கும் எப்போதும் அடுத்தவரின் உதவியை நாடாமல், அவ்வப்போது நாமும் சில பணிகளை செய்வதை பழக்கிக்கொள்ள வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், தோட்டவேலை போன்ற வீட்டு வேலைகளைச் செய்யும்போது, கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் எடை இழப்பில் நன்மை கிடைக்கின்றது.
இந்த வாழ்வியல் பழக்கங்களுடன் எப்போதும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மிக முக்கியம். உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் முழுமையான கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும். அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரிய அளவிலான நன்மைகளை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.