U19 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்தியர்கள்? 2000 டூ 2022

Sun, 11 Feb 2024-2:06 pm,

2022 உலகக் கோப்பை: நிஷாந்த் சந்து - 50(50), ஷைக் ரஷீத் - 50 (84). இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

 

2020: யஷஸ்வி ஜெய்வால் 121 பந்துகளில் 88 ரன்களை அடித்தார். இருப்பினும், இறுதிப்போட்டியில் வங்கதேச அணியே வெற்றி பெற்றது.  

2018: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மன்ஜோட் கல்ரா 101 ரன்களை அடித்து உலகக் கோப்பையையும் வெல்ல காரணமானார். 

 

2016: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், சர்ஃபராஸ் கான் 89 பந்துகளில் 51 ரன்களை சேர்த்து வெற்றிக்காக கடுமையாக போராடினார். 

 

2012: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அப்போதைய கேப்டன் உன்முகுந்த் சந்த் 111 ரன்களை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். 

 

2008: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தன்மே ஸ்ரீவத்சவா இந்த போட்டியில் அதிகபட்சமாக 46 ரன்களை சேர்த்தார், இந்தியா 159 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

 

2006: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெறும் 110 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 71 ரன்களுக்கே ஆல்-அவுட்டாகி கோப்பையை தவறவிட்டது. புஜாரா, ரோஹித் சர்மா, ஜடேஜா என பெரிய பேட்டர்கள் இருந்தும் சுழற்பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அதிகபட்சமாக 25 ரன்களை சேர்த்தார். 

 

2000: இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா 179 ரன்களை சேஸ் செய்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இந்திய அணியில் ரீதிந்தர் சோதி 39 ரன்களை அதிகபட்சமாக சேர்த்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link