Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சூப்பர் உணவுகள்
கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி டீடாக்ஸ் செய்யும் சிறந்த உணவாக பப்பாளி இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பப்பாளி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படும் மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த மசாலா., கல்லீரலில் உள்ள செல்கள் மீண்டும் உருவாக இது உதவுகிறது. கல்லீரலில் கொழுப்பு செய்வதையும் இது தடுக்கிறது.
இரும்பு சத்து நிறைந்த கீரை, கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் கீரையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய உணவு. இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.
உணவிற்கு மணம் மற்றும் சுவையைக் கொடுக்கும் பூண்டு, கல்லீரல் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் கொண்டது. கல்லீரலுக்கு மட்டுமல்லாமல் இதை ஆரோக்கியத்திற்கும் பூண்டு மிகச்சிறந்தது.
அவகெடோ என்று அழைக்கப்படும் வெண்ணை பழம், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்பர் பூட். தாதுக்கள் நிறைந்த இது ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.