இரண்டு இயக்குநர்களின் சண்டைக்கு இடையே மாட்டிக்கொண்ட கமல்..! என்னதாங்க பஞ்சாயத்து..?
’உலக நாயகன்’ என அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அவர்களில் பிரபல தமிழ் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனும் அடங்குவர்.
லோகி மற்றும் ஜிவிஎம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பரிமாறிக்கொண்ட ட்வீட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. இதனை ஜி.வி.எம் இயக்கியிருந்தார். ரீ-ரிலீஸ் என்றாலும் இப்படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு ரசிகர், “என்ன இருந்தாலும் ஜி.வி.எம்தான் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர். சாரி லோகேஷ் என்று குறிப்பிட்டிருந்தார்.
ரசிகரின் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த லோகேஷ், “கண்டிப்பாக ஜி.வி.எம் சார்தான் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர். என்று கூறினார். இதற்கு பதிலளித்த கௌதம், “ நான் பெஸ்ட் ஃபேன் பாய் இயக்குநராக இருந்தேன். விக்ரம் படத்திற்கு பிறகு அது கைமாறி விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
விக்ரம் படத்தை விட நல்ல படம் எடுக்க முயற்சி செய்வேன் என்று தன் ட்வீட்டில் குறிப்பிட்ட கௌதம் வாசுதேவ் மேனன், “இந்த சண்டையில் சட்டையெல்லாம் கிழியாது” என கூறியிருந்தார்.
இவர்களின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இதை மீம்ஸாகவும் மாற்றி வருகின்றனர்.
இதன் மூலம் இருவருமே கமலின் மிகப்பெரிய ரசிகர்கள் என்பது அனைவருக்கும் இன்னொருமுறை புலப்பட்டுள்ளது.