சுபிட்சம், மகிழ்ச்சி: சுக்கிரன் உதயத்தால் உருவாகும் கஜலட்சுமி யோகம்.. இந்த ராசிகளுக்கு உச்சகட்ட வெற்றி
சுக்கிரன்: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிக முக்கியமான ஒரு கிரகமாக கருதப்படுகிறார். பேச்சாற்றல், சாதுர்யம், உலக இன்பங்கள், செல்வம், மகிழ்ச்சி, புகழ் மற்றும் செழிப்புக்கான காரணியாக அவர் உள்ளார்.
சுக்கிரன் உதயம்: ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுக்கிரன் கடகத்தில் பெயர்ச்சியானார். கடகத்தில் பெயர்ச்சியான பிறகு ஆகஸ்ட் 18, அதாவது இரு நாட்களுக்கு முன்னர் அவர் இரவு 7.17 மணிக்கு கடக ராசியிலேயே உதயமாகியுள்ளார். சுக்கிரன் உதயத்தால் கஜகட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.
கடகத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியால் கஜலட்சுமி யோகம் உருவாகி வருவாகியுள்ளது. ஜோதிடத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான, மகிழ்ச்சியான முன்னேற்றப்பாதைக்கான நற்பலன்களை அளிக்கின்றது.
ராசிகளில் தாக்கம்: சுக்கிரன் உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 6 ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு செல்வம், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சுக்கிரனின் உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பல சிரமங்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்: சுக்கிரனின் உதயம் நல்ல பலனைத் தரும். குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். கடக ராசிக்காரர்கள் அதிக பலன் அடைவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் சொத்தில் முதலீடு செய்யலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்: சுக்கிரனின் உதயம் இவர்களுக்கு நன்மை தரும். செயல்களில் வெற்றி உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் உச்சபட்ச பலன்களைப் பெறப் போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம். பொருளாதார நிலை உயரும்
கன்னி: சுக்கிரனின் உதயம் மிகவும் சுபமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.பதவி உயர்வுக்கான வாய்ப்பும், வருமானம் உயரும் வாய்ப்பும் உண்டு. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும், வாழ்க்கைத்துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு காரணமாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சொத்து, வாகனம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.