மெட்ராஸ் தினம் : ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள்..! பரித்தொகை விவரம்

Fri, 16 Aug 2024-1:20 pm,

மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'ரீல்ஸ்' போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. 

 

இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ரீல்ஸ் போட்டிக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

இந்த போட்டியில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. 

 

ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள் :  நபர் ஒருவர் இரண்டு ரிலீஸ் வரை போஸ்ட் செய்யலாம். ஒவ்வொரு ரீல்ஸ் 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். 

 

இந்த ரீல்ஸ்கள் மெட்ராஸின் பெருமைகளை, வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும். 

 

கலாச்சாரம், கட்டடம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கலாம். சென்னை அருங்காட்சியகத்தின் அழகியலை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கலாம்.

 

ஒரிஜினலாகவும் புதிதாகவும் உருவாக பட்ட ரீல்ஸ்களாக இருக்க வேண்டும். எந்தவொரு போட்டியிலும் இதற்கு முன்னர் பயன்படுத்தியிருக்கக்கூடாது

 

இந்த ரீல்ஸ்களை வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மட்டுமே பதிவிட வேண்டும்.

 

தமிழக அரசின் ரீல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் எடுக்கக்கூடிய ரீல்ஸ்களை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தமிழ்நாடு அருங்காட்சியகத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை கொலாபுரேட் செய்ய இன்வைட் பண்ண வேண்டும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link