சனி உதயமாகி உச்சம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், வீட்டில் பணமழை கொட்டும்
மேஷம்: மார்ச் மாதத்தில் உதயமாகும் சனியால் நிறைய நன்மைகளை பெறுவீர்கள். பண வருமானம், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். மன மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூர்வீக சொத்து ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்: சனியின் உதயத்தால் தொழில் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். கடின உழைப்புக்கு எதிர்ப பலன் கிடைக்கும்.
மிதுனம்: சனியால் நீங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை பெறுவீர்கள். பொருளாதார தடைகள் நீங்கும். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கலாம். தொழிலில் நல்ல வருமானம் பெற்று, நிதி நிலை மேம்படும். நிறைய வருமானம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கலாம்.
துலாம்: சனி உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நாட்கள் தொடங்கும். கனவுகள் அனைத்தும் நிஜமாகும். பதவி உயர்வுடன் சம்பளம் உயர்வையும் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும்.
தனுசு: சனியின் உதயம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். அதனுடன் நீங்கள் சில பொறுப்புகளையும் பெறலாம். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.