லியோ சோலோ ரிலீஸ் இல்லை! இன்னொரு படமும் வெளியாகிறது!
தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' இந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது.
இந்நிலையில், கோலிவுட்டில் இந்த தேதியில் வேறு எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்தது. இதனால் லியோ படத்திற்கு அதிக திரையரங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாரதிராஜா நடித்துள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படம் அக்டோபர் 20ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கிய முதல் படம் மார்கழி திங்கள்.
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் ஷியாம் செல்வன் மற்றும் ரக்ஷனா ஆகியோர் முக்கிய ஜோடியாக நடிக்கின்றனர். பாரதிராஜா, இயக்குனர் சுசீந்திரன், அப்புக்குட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மார்கழி திங்கள் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு, தியாகு படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.
லியோ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.