கடகத்தில் செவ்வாய்... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீசும்!

Mon, 15 May 2023-9:25 pm,

செவ்வாய் கிரகம் கடந்த மே 10ம் தேதி கடக ராசியில் சஞ்சரித்தார். இந்த பெயர்ச்சியினால்  சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீசும். அவர்கள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். பணியில் சம்பள உயர்வு பதவி உயர்வு பெற்று வருமானம் பெருகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

செவ்வாய் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களின் வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை வலுப்படும். பணியிடத்தில் கவுரவம், சமபள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பண வரவை கொடுக்கும் வாகனம், நிலம் வாங்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். பணியில் இருப்பவர்களுக்கு  பதவி உயர்வு சம்பள உயர்வு என சாதகமான பலன்களை கொண்டு வரும். வேலையில் நீடித்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

செவ்வாய்  பெயர்ச்சியினால் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள், ஆனால் நீங்கள் அதனை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்

செவ்வாய்ப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் தீரும். பல நாள் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல மாற்றங்களை காண்பார்கள். நண்பர்களின் சகவாசம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், வேலைகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார்கள், மரியாதை கூடும். நிலம் வாங்க சிறந்த நேரம். தொழிலதிபர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சியினால், அவர்களது ஆசை நிறைவேறுவதுடன் வருமானமும் அதிகரிக்கும். இந்தக் காலம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு, மகிழ்ச்சியான செய்தி வரும்.

கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருமானம் பெருகும், நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கிடைக்கும்.  வேலை மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாடு செல்பவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் ஆசிரியர்களின் உதவியால் வெற்றி கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link