நூறாவது 20 ஓவர் போட்டியில் சதமடித்து மேக்ஸ்வெல் படைத்த சாதனைகள்..!

Tue, 28 Nov 2023-11:42 pm,

கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக ஆடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் மேக்ஸ்வெல்

 

அபாரமாக விளையாடிய அவர் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்

 

இந்த சதம் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார் மேக்ஸ்வெல். இருவரும் தலா 4 சதங்களை விளாசியிருக்கின்றனர்.

 

அதுவும் சேஸிங்கில் சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்களில் மேக்ஸ்வெல் முதல் இடத்தில் இருக்கிறார். 

 

20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சேஸிங்கில் வெற்றி பெறும்போது 3 சதங்களை அடித்திருக்கிறார் மேக்ஸ்வெல்.

 

20 ஓவர் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரராக இருந்த பின்சின் சாதனையையும் சமன் செய்துள்ளார் மேக்ஸ்வெல். இருவரும் தலா 47 பந்துகளில் சதமடித்துள்ளனர்.

 

இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரரானார் மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆரோன் பின்ச் இந்த சாதனையை வைத்திருந்தார். இப்போது மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link