உடல் ஆற்றல் முதல் மூளை ஆற்றல் வரை... அஸ்வகந்தா என்னும் அருமருந்து... !
அஸ்வகந்தா அடாப்டோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் மன அழுத்தத்திற்கு ஏற்பவும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவும்.
அஸ்வகந்தா மூலிகை மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து மனநிலையை மேம்படுத்தி மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது.
அஸ்வகந்தா நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், தற்போதுள்ள மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
அஸ்வகந்தா குடல் அழற்சியைக் குறைப்பதன் மூலமும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலமும், செரிமானக் கோளாறுகளை போக்குகிறது..
மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், ஹார்மோன்களின் சமநிலையை ஏற்படுத்துவதன் மூலமும், க்கமின்மை பிரச்சனை தீர்கிறது.
அஸ்வகந்தா மூலிகையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.இது உடல் வலி, மூட்டு வலிக்கும் தீர்வைத் தரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.