Black Alien: வித்தியாசமான தோற்றத்திற்காக விசித்திரமான அறுவை சிகிச்சை

Mon, 15 Mar 2021-10:16 pm,

அந்தோனி லோஃப்ரெடோ (Anthony Loffredo) தன்னை ஒரு ‘கருப்பு அன்னியராக’ மாற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். பல்வேறு மருத்துவ முறைகள் மூலம் அந்தோணி தனது மேல் உதடு, மூக்கு, காதுகளை துண்டித்து, நாக்கை இரண்டாகப் பிரித்துள்ளார். அதோடு, 32 வயதான அவரது உடலில் பச்சை குத்தாத இடமே இல்லை என்று சொல்லலாம். (Picture source: Instagram/_the_black_alien_project)

அந்தோணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் the_black_alien_project என்று அழைக்கப்படும் ஒரு சாதாரண பையனாக இருந்து ‘கருப்பு அன்னியராக’ இருப்பதை காட்டியுள்ளார்.  

“மிகச் சிறிய வயதிலிருந்தே, மனித உடலின் பிறழ்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து நான் ஆர்வமாக இருந்தேன். நான் ஒரு பாதுகாப்பு காவலராக பணிபுரிந்தபோது நான் விரும்பிய வழியில் என் வாழ்க்கையை வாழவில்லை என்பதை உணர்ந்தேன். எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டேன். அடுத்த சில மாதங்களுக்கான எனது திட்டங்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பது இயல்பானது”என்று அவர் 2017 இல் பிரெஞ்சு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரியில், லோஃப்ரெடோ தனது மேல் உதடு மற்றும் மூக்கை அகற்றிய பிறகு, கஷ்டமாக இருந்தாலும், தனது தோற்றத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதாக கூறுகிறார். அவரது நாட்டில் உருமாற்ற சிகிச்சை செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்பதால், லோஃப்ரெடோ பார்சிலோனாவுக்கு சென்று அதற்கான அறுவை சிகிச்சைகளை செய்துக் கொண்டார்.  

(Picture source: Instagram/_the_black_alien_project)

 

 

அன்னையர் தினத்தில் அம்மாவுடன்     லோஃப்ரெடோ, இங்கிலாந்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு 38,700 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.   (Picture source: Instagram/_the_black_alien_project)

அந்தோணி தன்னுடைய சில த்ரோபேக் படங்களையும் பதிவேற்றியுள்ளார், இது அவரது மாற்றத்தின் முன்னும் பின்னும் பதிப்பைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் லோஃப்ரெடோ தனது தோலை அகற்றி, அதற்கு பதிலாக உலோகத்தை பொருத்துவாராம்!  

(Picture source: Instagram/_the_black_alien_project)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link