சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!
ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.
மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் தனது சொந்த ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோக, கேந்திர திரிகோண ராஜயோகம் ஆகிய யோகங்கள் உருவாகியுள்ளன.
சனி பெயர்ச்சியால் உருவாகியுள்ள ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களின் மகிழ்சி பன்மடங்காக அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: சனி பகவானால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்க்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் தற்போது அதிகப்படியான லாபத்தை காண்பார்கள். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதிநிலை மேம்படும். அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், கவலை கொள்ளத் தேவை இல்லை. உங்கள் பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்தால் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்: கும்ப ராசியில் சனி இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். நீங்கள் திட்டமிட்டுள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். புதிய வருமான வழிகள் திறக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகம் மகிழ்ச்சியை மட்டுமே தரும். இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களும் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாகனம், சொத்து, வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். சம்பளம் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் தொழிலில் நல்ல காலம் தொடங்கலாம். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சஷ ராஜயோகத்தின் தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் கனவு நிறைவேறும். மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை