விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்: பால் முழு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. சுகாதார நிபுணர்களும் இதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர், ஆனால் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவதால், ஆண்களின் விந்தணுவின் தரம் (Sperm Quality) மோசமடையக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில நேரங்களில் விலங்குகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்த வகை பாலை உண்ணும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடுகள் ஏற்படக் கூடும். இது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, எனவே குறைந்த அளவு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி: திருமணமான ஆண்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதைக் குறைக்கவும். இதை சாப்பிடுவதால் புரதம் கிடைக்கும் என்றாலும், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதோடு, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றா, இந்த வகை இறைச்சியை தினசரி உணவில் இருந்து நிச்சயம் விலக்க வேண்டும். மேலும், சந்தையில் கிடைக்கும் அசைவ உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பெரும்பாலும் பதப்படுத்த இறைச்சியாக இருக்கலாம்.
சோயா உணவுகள்: சோயா உணவுகளில், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். பாஸ்டனில், விந்தணு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் 99 ஆண்களின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அளவிற்கு அதிகமான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்: இன்றைய இளைஞர்கள், பலர் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பிடியில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து சிகரெட் மற்றும் மது அருந்தினால், அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால், விந்தணு எண்ணிக்கை குறைந்து நீங்கள் தந்தையாகும் கனவு நிறைவேறாமல் போகலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)