புத பகவானின் அனுக்கிரகத்தால் 60 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் 4 ராசிகள்
புதனின் சஞ்சார காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணியில் மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் இந்த 60 நாட்களில் கைக்கூடும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
இந்த காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த சந்தர்ப்பத்தில் புதிய தொழில் தொடங்கலாம். வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்கும் ஏற்ற காலம் இது. புதிய வேலை வாய்ப்பு அமையும். வாரக்கடன்கள் வந்து சேரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலையைத் தொடங்க இதுவே சரியான நேரம். அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தீவிரமாகத் தயாராக வேண்டும்.
கன்னி - புதன் சஞ்சாரம் செய்வதால் இவர்களுக்கு அடுத்த 2 மாதங்கள் தொழில் சாதகமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை.)