Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்

Sun, 21 Jul 2024-2:05 pm,

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஆட்சியமைத்த பின் அரசின் பட்ஜெட் வரும் செவ்வாய்கிழமை (ஜூலை 23) அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 7ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் (Budget 2024) குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) கோரிக்கை விடுத்து, தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது X தளத்தில் குறிப்பிட்ட 6 திட்டங்களை இங்கு காணலாம். 

 

மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என கூறி உள்ளார். 

 

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

 

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்திடவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

 

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்தித்தரவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link