Astro: ஜூலை மாதத்தில் அமோக வாழ்க்கையை வாழப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!

Mon, 24 Jun 2024-3:38 pm,

கிரக பெயர்ச்சிகள்: ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தனது ராசியை மாற்றும். சுக்கிரன் கடக ராசியில் பிரவேசிக்க உள்ளார். கிரகங்களின் ராஜாவான சூரியனும் கடக ராசியில் சஞ்சரிப்பார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்.

சனி வக்ர பெயர்ச்சி: சுக்கிரன் பெயர்ச்சியை தவிர செவ்வாய், குரு பகவான் மற்றும் சனியின் நிலையும் மிக முக்கியமானதாக இருக்கும். ஜூன் இறுதியில் வக்ர நிலையை அடையும் சனி பகவான் நவம்பர் 15, 2024 வரை வக்ர நிலையில் நீடிப்பார். 

ரிஷபம் ராசிக்காரர்கள் நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகளைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மொத்தத்தில் ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கடக ராசிக்காரர்களின் கனவுகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் நிறைவேறும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தடைபட்ட வேலைகளும் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதம் தொழிலில் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதன் காரணமாக சில கடினமான காரியங்களில் வெற்றியை அடைய முடியும். நீதிமன்ற வழக்கில் வெற்றி சாத்தியம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சிறப்பானதாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் சில கனவுகள் நனவாகும். பொருளாதார நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சுகபோகங்களும், ஆடம்பரங்களும் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link