சனி வக்ர நிவர்த்தி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Sat, 04 Nov 2023-8:48 am,

மேஷம் : சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஆனால் உங்கள் வருமானத்தை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை கூடும். புதிய வேலைகளை செய்ய நினைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

ரிஷபம்: சனியின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் தந்தையின் தொழிலில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் வேலை அல்லது பணியிடத்தில் பிஸியாக இருக்க வாய்ப்பு உள்ளது. 

மிதுனம்: இந்த சனி வக்ர நிவர்த்தியால் உங்கள் பணி வேகம் பெறும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், நிச்சயமாக பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள், அதிர்ஷ்டம் நிச்சயமாக உங்கள் பக்கம் இருக்கும். நிதி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். 

கடக ராசி: இந்த சனிப்பெயர்ச்சியால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். இது தவிர, கடந்த காலத்திலிருந்து ஏதாவது பயம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த காலத்தில் திடமான மனமும் ஒழுக்கமும் உங்களுக்கு மிக தேவையாக இருக்கும். 

சிம்மம்: சனியின் இந்த சஞ்சாரத்தால், உங்கள் திருமண உறவுகள் நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் மனைவியின் உணர்வுகளை மதிக்கவும். இந்த நேரத்தில், அமைதியாக இருந்து, தெளிவான மனதுடன் வேலை செய்யுங்கள். தொழில் சம்பந்தமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. 

கன்னி: சனி வக்ர நிவர்த்தியால் சில வேலைகளில் உங்கள் நண்பரின் உதவி கிடைக்கும். எதிரிகள் உங்களைத் துன்புறுத்த முயற்சி செய்யலாம். கூட்டாண்மையுடன் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

துலாம்: உங்கள் சொந்த ஊர் அல்லது நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு நல்ல கல்லூரியில் நீங்கள் சேர்க்கை பெறலாம். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். சிறிய அலைச்சல் இருக்கும். ஆனால் அதனால் நன்மையே உருவாகும்.

விருச்சிகம்: இந்த சனிப்பெயர்ச்சியால் தாயாரின் உடல்நிலை மேம்படும். நீங்கள் புதிதாக நிலம் வாங்க நினைத்தால், சில நாட்கள் காத்திருந்து பின்னர் வாங்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். சனியின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் ஆளுமை உயரும். நம்பிக்கை அதிகரிக்கும். சகோதர-சகோதரி உறவுகள் வலுவாக இருக்கும். ஆனால் அவர்களுடன் சண்டையிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். உங்கள் புகழையும் மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள, நீங்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். 

மகரம்: இந்த காலத்தில் பேச்சில் கவனம் தேவை. தேவையான அளவு மட்டுமே பேசுவது நல்லது. அலுவலகத்தில் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் சண்டைகளை தவிர்க்கவும். 

 

கும்பம்: இந்த சனிப்பெயர்ச்சியால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு சில தடைகள் வரக்கூடும். முழுமையான கவனத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பலன் கிடைக்கும்.

மீனம்: சனியின் வக்ர நிவர்த்தியால் இத்தனை நாட்களாக வாட்டி வதைத்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பல நல்ல செய்திகளை பெறுவீர்கள். செலவு செய்வதில் சிக்கனம் தேவை. புதிய திட்டங்களை துவங்கும் முன் யோசித்து செயல்படவும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link