தொப்பை தொல்லையை தூரமா விரட்டும் சூப்பர் ட்ரிங்ஸ்: காலையில் குடிச்சா கச்சிதமா குறைக்கலாம்
நம் உடலில் பல இடங்களில் கொழுப்பு சேர்கிறது. எனினும் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. ஏனெனில் இது வேகமாக சேர்ந்து விடுகிறது, ஆனால் இதை கரைப்பது மிக கடினமான ஒரு பணியாக இருக்கின்றது. இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கின்றது.
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். உடற்பயிற்சி இல்லாமல், உடலின் எந்தப் பகுதியிலும் சேரும் கொழுப்பை எந்த வகையிலும் அகற்றுவது கடினம். இருப்பினும், சில எளிய உணவுகளின் உதவியுடன், தொப்பை கொழுப்பை கரைப்பது மற்றும் எடை இழப்பு முயற்சியை நிச்சயமாக எளிதாக்க முடியும். தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவும் சில காலை பானங்களை பற்றி இங்கே காணலாம்.
மூலிகை தேநீர் நல்ல சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். க்ரீன் டீ, புதினா, இலவங்கப்பட்டை போன்ற மூலிகை டீகளை காலையில் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்பு வேகமாக குறைகிறது.
பிளாக் காபியில் கலோரிகல் இல்லை. இது மட்டுமின்றி காஃபின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. ஆகையால் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்கள் பிளாக் காபி உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சி மற்றும் மஞ்சள் அகிய இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த மசாலாப் பொருட்களாகும். அவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. காலையில் தினமும் இஞ்சி மற்றும் மஞ்சள் நீரை உட்கொண்டு வந்தால் கொழுப்பு வேகமாக குறையும், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும், எடை குறையும்.
வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து, அதன் நீரை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும். வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் இது உதவுகிறது.
சீரகம் செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு மசாலா பொருளாகும். காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிறு சுத்தமாவதோடு, செரிமானமும் துரிதமாகும். இதுமட்டுமின்றி இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை நீக்கவும் உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.