மியூசியம் ஆஃப் தெ ஃப்யூச்சர்! உலகின் மிக அழகான கட்டிடம் துபாயில்!
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த உலகின் மிக அழகான கட்டிடம் 77 மீட்டர் அல்லது 225 அடி உயரம் மற்றும் மொத்தம் 30,548 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.
எதிர்கால அருங்காட்சியகம் கிலா டிசைன் (Qila Design Architects) கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ப்யூரோ ஹாப்போல்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்சியின் பொறியாளர்களால் கட்டப்பட்டது.
மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் கட்டிடம் துருப்பிடிக்காத எஃகால் ஆனது. இதில் ஒரு சிறப்பு ரோபோடிக் உதவி செயல்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,024 எஃகு துண்டுகள் உள்ளன. கட்டிடம் 17,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
துபாயில் உள்ள இந்த மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் கட்டிடத்திற்குள் செல்ல மூன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 2946 ரூபாய் (AED 145.00). மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம்.
துபாய் சென்றால் தவறாமல் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் இது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். https://museumofthefuture.ae/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.