சீக்கிரமாக பணக்காரர் ஆக சீக்ரெட் சொல்லும் புத்தகங்கள்! தவறாமல் படிங்க..

Tue, 27 Feb 2024-2:49 pm,

பல புத்தகங்கள் நாம் எளிதாக கடந்து விடக்கூடியவையாக இருக்கும். ஒரு சில புத்தகங்கள், நமது வாழ்க்கையை அப்படியே திருப்பி போடுபவையாக இருக்கும். கதை புத்தகங்களுக்கு வாசகர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒரு சிலருக்கு தனக்கு தேவையான விஷயங்களை அளிக்கும் Non-Fiction புத்தகங்களை மட்டுமே பிடிக்கும். அப்படி, உங்களை பணக்காரர் ஆவதற்கு சீக்ரெட் டிப்ஸ் கொடுக்கும் புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

1997ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம், ரிச் டேட் புவர் டேட் (Rich Dad Poor Dad). இந்த புத்தகத்தை ராபர்ட் கியோசகி மற்றும் ஷாரான் லெட்சர் என்பவர்கள் இணைந்து எழுதியுள்ளனர். தனி மனிதன், அவனது வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது, எப்படி சேமிப்பது, சொத்து சேர்ப்பதற்கான முக்கியத்துவம் போன்ற பல விஷயங்களை வாசகர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. 

1937ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம், திங்க் அண்ட் க்ரோ ரிச் (Think and Grow Rich). இந்த புத்தகத்தை நெப்போலியன் ஹில் என்பவர் எழுதியிருக்கிறார். நம் கனவை அடைவதற்கும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் எப்படி யோசிக்க வேண்டும், எப்படி அதை செயல்முறை படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது, இந்த புத்தகம். 

1926ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம், தி ரிச்சஸ்ட் மேன் இன் பாபிலூன் (The Richest Man In Babylon). இதில், பணக்காரர் ஆவதற்கான சீக்ரெட் என்ன என கூறப்பட்டுள்ளது. இதில், செலவுகளை எப்படி குறைத்துக்கொண்டு சேமிக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என கூறப்பட்டுள்ளது.  இதனை ஜார்ஜ் சாமுவேல் க்ளாசன் என்பவர் எழுதியிருக்கிறார். 

தி 4 ஹவர் வர்க் வீக் (The 4-Hour Workweek) புத்தகத்தை டிம் ஃபெர்ரிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இப்புத்தகம், 2007ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இதில், ஒரு மனிதன் எப்படி அவனுக்கு வைத்துக்கொண்டுள்ள கட்டுக்களை தாண்டி வளர வேண்டும், எப்படி வேலையையும் வாழ்க்கையையும் பாலன்ஸ் செய்து பணக்காரர் ஆக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

1996ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம், தி மில்லியனர் நெக்ஸ்ட் டோர்: தி சர்ப்ரைசிங் சீக்ரெட்ஸ் ஆஃப் அமெரிக்காஸ் வெல்தி (The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy). இந்த புத்தகத்தை தாமஸ் ஜே.ஸ்டான்லி என்பவர் எழுதியிருக்கிறார். இதில், பணக்காரர்களின் தினசரி நடவடிக்கைகள் என்னென்ன, அவர்கள் எப்படி சேமித்தனர், எப்படி மில்லியனர்களாக மாறினர் என்பதை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. 

டாம் கார்லி எழுதிய புத்தகம், ரிஷ் ஹேபிட்ஸ் (Rich Habits). இந்த புத்தகம், 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எந்த வயதில் இருப்பவர்களும், எந்த தொழில் செய்பவர்களும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடையலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link