பாலுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் ஓடோடி போகும் பிரச்சனைகள்...! நோ சைட்எபெக்ட்
சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் பாலுடன் எதை சேர்த்தால் என்னென்ன பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
தேன் -
தேன் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் ட்ராபிகல் பயோமெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், தேன் தொண்டைப் புண்ணை ஆற்றவும், இயற்கையான இருமல் அடக்கியாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்சி -
பாலில் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் மற்றும் குமட்டல் குறையும். இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளுக்கு அறியப்படுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இஞ்சி அஜீரணம் மற்றும் குமட்டல் அறிகுறிகளை திறம்பட குறைக்கும் என்று காட்டுகிறது.
இலவங்கப்பட்டை -
இலவங்கப்பட்டையுடன் சேர்த்து ஒரு கிளாஸ் பாலை குடிக்கும்போது, இது ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். மேலும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது இலவங்கப்பட்டை பால் கூட்டணி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்.
பாதாம் -
பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிரம்பியுள்ளன, அவை பாலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், பாதாம் பருப்பு கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சள் -
சமையலறையில் இருக்கும் இயற்கை அருமருந்தான மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதுடன் பாலை சேர்த்து சாப்பிடும்போது, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குங்குமப்பூ -
குங்குமப்பூ பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மனநிலையை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். மேலும், ஆண்டிடிரஸன் விளைவுகளையும் கொண்டுள்ளது.