Viral News: நகை பணத்துடன் ஓடியே போன கில்லாடி மணமகள்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்
ராஜஸ்தானின் பில்வாராவிலிருந்து ஒரு அதிர்ச்சி சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது. இதன் நடுநாயகமாக இருப்பது ஒரு புதுமணப்பெண்!!
மணப்பெண் ஏராளமான ரொக்கம் மற்றும் நகைகளுடன் அபேஸ் ஆனார். காலையில் எழுந்த மணமகனுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி காத்திருந்தது.
மணமகன் வீட்டில் 4 லட்சம் 21 ஆயிரம் ரொக்க பணம் கொடுத்து மணமகளை மணந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
திருமணமாகி இரண்டாவது நாள் மணமகள் நகை பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு போனார். பின் திரும்பி வரவில்லை.
ஜூன் 23 அன்று திருமணம் நடந்தது. மணமகன் தரப்பில் இருந்து 4.21 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
இது தவிர மணப்பெண்ணுக்கு தங்கச்சங்கிலி. தாலிக்கொடி, மோதிரம், செயின் ஆகியவையும் அளிக்கப்பட்டன.
மேலும், சுமார் 700 கிராம் வெள்ளி சாமான்களும் கொடுக்கப்பட்டன. 27 ஜூன் அன்று மணமகள் இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு சென்ற மணப்பெண் திரும்பவில்லை. அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டுக்கு தாங்கள் ஏமாற்றப்படது தெரிய வந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் ஊர்ஜிதப்படுத்தவில்லை.