7th Pay Commission முக்கிய செய்தி: ஏப்ரல் முதல் உங்கள் PF, Gratuity பங்களிப்பு மாறக்கூடும்
புதிய ஊதியக் குறியீடு 2021 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய ஊதியக் குறியீட்டில் ஒருவரது அடிப்படை சம்பளம் அவரது நிகர மாதாந்திர CTC-யில் 50 சதவிகிதம் இருக்கலாம் என்ற வசதி உள்ளது.
2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒருவரின் நிகர மாத சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் கொடுப்பனவு வடிவத்தில் யாராலும் பெற முடியாது. அதாவது மாதாந்திர கொடுப்பனவு நிகர சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்க முடியாது.
வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் விதிகள் குறித்து விரிவாகக் கூறி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் அபூர்வா சந்திரா திங்களன்று, புதிய ஊதியக் குறியீட்டை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கான விதிமுறை உருவாக்கும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
"இந்த அமைச்சகம் விரைவில் இந்த நான்கு குறியீடுகளை நடைமுறைக்கு கொண்டுவரும். அதாவது, ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் அபூர்வா சந்திரா கூறினார். விதிகளை வகுப்பதில் இதில் தொடர்புடைய அனைவரும் ஆலோசிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
ஒருவரின் மாதாந்திர பி.எஃப் பங்களிப்பு மற்றும் கிராஜுவிட்டி என்பது ஒருவரின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாகும். புதிய ஊதியக் குறியீட்டை அமல்படுத்திய பின்னர் ஒருவரின் மாதாந்திர பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பில் மாற்றம் ஏற்படும். எனினும், புதிய ஊதியக் குறியீட்டை அமல்படுத்துவதற்கான எந்தவொரு காலக்கெடுவையும் மையம் இன்னும் நிர்ணயிக்காததால், ஊதியக் குறியீடு 2021 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மத்திய அரசு ஊதியக் குறியீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், PF, EPF மற்றும் கிராஜுவிட்டியின் புதிய மாதாந்திர பங்களிப்பு காரணமாக, அரசாங்க அல்லது தனியார் ஊழியர்களின் (ஈ.பி.எஃப் கணக்கு வைத்திருக்கும்) மாத சம்பளம் உயருமா அல்லது குறையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒருவரின் பி.எஃப், ஈ.பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பு மாறும் என்பது உறுதி.